மகாத்மா போதித்த ஒற்றுமை உணர்வையும், அமைதியையும் கட்டிக்காத்திட உறுதியேற்போம் - தினகரன் ட்வீட்

 
ttv

காந்தியடிகள் போதித்த ஒற்றுமை உணர்வையும், அமைதியையும் கட்டிக்காத்திட உறுதியேற்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

gandhi

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது எனலாம்.  1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே  பொறுப்பாளரானார்.  இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் காந்தி நடத்திய பல அறவழி போராட்டத்தின் பயனாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திர நாடாக மாறியது.  இதைத்தொடர்ந்து மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் டில்லி  பிர்லா மாளிகை தோட்டத்தில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அகிம்சை எனும் அறவழிப் போராட்ட வடிவம்கொண்டு, இந்தியாவிற்கு விடுதலைப் பெற்றுத்தந்த நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் இன்று! இந்நாளில், 'அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது' என்ற மகாத்மாவின் கொள்கையைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், அவர் போதித்த ஒற்றுமை உணர்வையும், அமைதியையும் கட்டிக்காத்திட உறுதியேற்போம். என்று பதிவிட்டுள்ளார்.