காந்தி ஜெயந்தி - தினகரன் மரியாதை

 
th

காந்தி ஜெயந்தியையொட்டி அன்னாரின் திருவுருவ படத்திற்கு தினகரன் மரியாதை செலுத்தினார்.

gh

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைதள பக்கத்தில், "அகிம்சை வழியில் மக்களை வழிநடத்தி சுதந்திரம் எனும் உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் சென்ற தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள்  அவர்களை  பிறந்த தினம் இன்று.



அன்பு, அகிம்சை, உண்மை, கருணை, நல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை தன் வாழ்க்கையின் மூலமாகவே வெளிப்படுத்திய அண்ணல் காந்தியடிகளின் வழியில் பயணிக்க அவர் பிறந்த இந்த நன்னாளில் உறுதியேற்போம்."என்று குறிப்பிட்டுள்ளார்.