“விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - மக்களுக்கு என்ன பயன்?" - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி

 
tn

சிலை வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லும்படி கடவுளே கேட்காத நிலையில், விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

vinayagar

 கோவை, ஈரரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலத்திற்கும் அனுமதிக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடுத்தது.  ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட 13 இடங்கள் மற்றும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலங்களுக்கும் அனுமதி கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தது.

இதில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் தாமோதரன் , தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுகிறது; கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் என்று வாதிட்டார்.

vinayagar chadurthi

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி தமிழ்நாடுவிநாயகர் கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்னபயன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது;  இவை தனது சொந்தக் கருத்து மட்டுமே. அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் ஏற்கப்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.