ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற கும்பல் கைது! ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா ?

 
11

ஆஷிஷ் சர்மா என்பவர் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தார். அவரைத் தொடர்பு கொண்ட தீரஜ், கிரிஷ் பார்க்கிற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டார். அங்கு பியூஷ் மஹேந்திரா என்ற மற்றொரு நபரை அவர் சந்தித்தார். மேலும், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக தீரஜ் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதற்கு பதிலாக பியூஷ் மஹேந்திரா என்பவர் ஒரு கவரை தீரஜிடம் கொடுத்தார்.

வீட்டிற்கு வந்து தீரஜ் அந்த கவரை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், அந்த கவரில் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட் மட்டுமே இருந்தது. டிக்கெட் வாங்கியதில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேற்கு வங்காள கருப்பு சந்தை தடுப்புச் சட்டம் 1948-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்ட பியூஷ் மஹேந்திரா மற்றும் அவரது கூட்டாளி கமல் உசேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 சாதாரண டிக்கெட்டுகள், 4 விஐபி டிக்கெட்டுகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 20,600 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், நியூ மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷாபாஸ் கான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் ஐபிஎல் டிக்கெட் கருப்பு சந்தையில் விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து ஆறு ஐபிஎல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.