விமானத்தில் பெட்ரோல் கசிவு - உயிர் தப்பிய பயணிகள்

 
ச் ச்

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 145 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரத்துக்கும் மேலாக விமானம் தாமதமாகிறது. ஆகையால் விமானத்தில் செல்லவேண்டிய 145 பயணிகளும் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.  

12 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் 2 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் விமானம் புறப்படாததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் பெட்ரோல் கசிந்ததை உரிய நேரத்தில் முன்கூட்டியே விமானி கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் பழுதடைந்த வால்வு சரிசெய்யப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.