ரயில் வரும் போது ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் சஸ்பெண்ட்
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் ரயில் வரும் போது ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் ஜெயசிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட சேது விரைவு ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரயில்வே கேட் அருகே வந்த போது அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கண்டு சுதாரித்துக் கொண்ட சேது விரைவு ரயில் இன்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டு கிழே இறங்கி வந்து கேட்டை மூடும்படி கூறியதையடுத்து கேட் மூடப்பட்டது. இதுகுறித்து கேட் கீப்பரிடம் கேட்டபோது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கேட்டை மூடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் ரயில் வரும் போது ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் ஜெயசிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே கேட் மூடப்படாததால் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


