கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம்- விசாரணையில் உறுதி

 
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம்- விசாரணையில் உறுதி கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம்- விசாரணையில் உறுதி

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த திருச்சி கோட்ட ரயில்வே துறை சார்பில் திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழுவினர் விபத்து தொடர்பாக கேட் கீப்பர், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட், ரயில் நிலைய மேலாளர், ஆலம்பாக்கம் ரயில் நிலைய இரண்டு மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் இரண்டு பேர், ரயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த தலா ஒரு முதன்மை லோக்கோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஸ்டேஷன் மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார். விபத்துக்கு பின் ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, கேட்டை மூடவில்லை என்று ஒப்புக்கொண்டது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.