உங்க உடல் எடை என்ன? யூடிபர்களின் கேள்வியால் டென்சனான நடிகை

 
s s

உடல் எடை குறித்த கேள்வி.. அது என்ன கேள்வி? என நடிகை கௌரி கிஷன் டென்ஷன் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன ? என  கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன், இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் முறையானது அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார். 

இந்த நிலையில் இன்றைய அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூடியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி. எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என பதில் அளித்தார். இருப்பினும் நடிகை கௌரி கிஷன் பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதால் நடிகை கௌரி கிஷன்   கண்கலங்கினார். செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் கூட இல்லாத நிலையில் இந்த தரமற்ற செயலுக்கு யாரும் கேள்வி எழுப்பமாட்டுகிறீர்கள் என செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் யூடியூபர்கள் செய்யும் செயலால் நடிகை கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.