யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை பாய்கிறது!

 
tn tn

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு  எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

tn

யூடியூபர் இர்ஃபான் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பிரபலமானவர். உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று புட் ரிவ்யூ செய்து வரும் இர்ஃபான் சமீபத்தில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் ஹசீஃபா தற்போது கர்ப்பமாக உள்ளார்.  இந்த சூழலில் இர்ஃபான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு  அதனை தன் நண்பர்களுடன் இணைந்து இதை கொண்டாடியுள்ளார். இதற்கான வீடியோவை அவர் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

tn

இந்நிலையில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவெடுத்துள்ளது.  அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.  தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்து, குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.