பொது சிவில் சட்டம் - விரைவில் அதிமுக கடிதம்!!

 
admk

பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது.

tn

சமய சார்பற்ற நாடான இந்தியாவில், வாழும் பல்வேறு சமய மக்களுக்கான தனிநபர் சட்டத்தினை (Personal Law) நீக்கி, அதற்கு பதிலாக நாட்டின் அனைத்து தரப்பு சமய மக்கள் கடைப்பிடிக்க வசதியாக பொது உரிமையியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த, 1949 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 44-இல் பரிந்துரை செய்தது. ஆனால் இது வரை இந்திய அரசு பொது உரிமையியல் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தவில்லை.

admk office

இந்நிலையில் பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது, அது எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என சட்ட ஆணையத்திற்கு கடிதம் மூலம் அதிமுக விரைவில் தெரிவித்துள்ளது.  அதிமுக சார்பில் இன்று அல்லது நாளை சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.