‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’- விருதை வென்ற அஜித்

 
‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’- விருதை வென்ற அஜித் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025’- விருதை வென்ற அஜித்

பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோலின் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' (Gentleman Driver of the Year 2025) விருதை, இந்திய நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் பெற்றுள்ளார்.

அஜித்


பிலிப் சாரியோல் மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழுமம் (Philippe Charriol Motorsport Group) மற்றும் SRO மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழுமம் இணைந்து இத்தாலி தலைநகர் வெனிஸில் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' (Gentleman Driver of the Year 2025) என்ற விருதை, இந்திய நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமாருக்கு வழங்கி கெளரவித்தது. இந்த விருது, பொழுதுபோக்கிற்காகவும் ஆர்வத்திற்காகவும் பந்தயத்தில் ஈடுபடும் வீரர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச அளவில் மோட்டார்ஸ்போர்ட்டில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியதற்காக அஜித் குமாருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவி ஷாலினி, இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி, வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.