அடுத்த வாரம் கல்யாணம்... முன்னாள் காதலன் மிரட்டியதால் ஆசிரியை விபரீத முடிவு..!

 
1 1

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சாய்ராபானு. இவருக்கும் ஒரு இளைஞருக்கும் மே 8ம் தேதி  திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.  திருமணத்திற்கான வேலைகளில் சாய்ராபானுவின் பெற்றோர் ஈடுபட்டு வந்த  நிலையில் சம்பவத்தன்று மாலையில் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சாய்ராபானு பெற்றோர் வெளியே சென்றிருந்தார்.  

வீட்டில் தனியாக இருந்த சாய்ராபானு திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.  வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.  தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர்  சாய்ராபானுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  

மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் தனது சாவுக்கு முன்னாள் காதலன் மைலாரி தான் காரணம் எனக் கூறியிருந்தார். நானும், மைலாரியும் காதலித்தோம். 5 ஆண்டுக்கு முன்பாக எங்களது காதல் முறிந்து விட்டது. எனக்கு திருமணம் முடிவான பின்பு, மைலாரியை காதலிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படம், வீடியோவை வெளியிட போவதாக மிரட்டல் விடுக்கிறார். இதனால் தற்கொலை செய்து கொள்வதாக  கூறி இருந்தார். அதன்பேரில், மைலாரி மீது கதக் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.