பள்ளிக்கு செல்லாமல் காதலனுடன் ஊர் சுற்றிய சிறுமி விபத்தில் பலி

 
ச் ச்

செங்கோட்டையில் இளம்பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமான வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த வல்லத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரது மகள் பாக்கியலட்சுமி(16). இவர் குற்றாலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதை ஊரைச் சேர்ந்த ரமேஷ்(24) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5ஆம் தேதி ரமேஷ் பாக்கியலட்சுமியை  பைக்கில் அழைத்துக் கொண்டு வல்லத்திலிருந்து செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தபோது  நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பாக்கியலட்சுமி பலத்த காயமடைந்தார். பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பாக்கியலட்சுமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான ரமேஷை கைது செய்யக்கோரி பாக்கியலட்சுமியின் உறவினர்கள் செங்கோட்டை காவல் நிலையம் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து தென்காசி செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.