காதலன் கார் வாங்க வீட்டிலிருந்து ரூ.20 லட்சம் திருடித் தந்த காதலி

 
ச் ச்

காதலன் கார் வாங்க வீட்டிலிருந்து ரூ.20 லட்சம் திருடித் தந்த காதலியின் செயல் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி அதே கல்லூரியில் பயிலக்கூடிய மாணவரை காதலித்து வந்துள்ளார். கார் வாங்க வேண்டும் என காதலன் விருப்பம் தெரிவிக்கவே, வீட்டில் இருந்து ரூ.20 லட்சத்தைத் திருடி தாராளமாக வழங்கியுள்ளார் மாணவி. அதுமட்டுமில்லாமல் காதலன் பணம் கேட்கும்போதெல்லாம் தாராளமாக வீட்டில் இருந்து அவ்வப்போது திருடி கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு  காதலன் தலைமறைவானதாக தெரிகிறது. இதையடுத்து தந்தையுடன் சேர்ந்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.