சட்டத்தின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் - ஜி.கே.மணி
பொய் வழங்குகள் போடுதல் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை எனவும், முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1949 ஆண்டு நவம்பர் 26- ஆம் நாள் நமது நாட்டின் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு முறையை ஏற்று சட்டமாக்கிய நாள் ஆகும்."சட்டத்தின் முன் அனைவரும் சமம்" இதன்படி இந்தியா ஒரு சுதந்திரமான, சமுதாய நலம் நாடும், சமயச்சார்பற்ற சம உரிமைக் குடியரசு நாடாகும். எல்லோருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நியாயம் கிடைக்கவும், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரம். சமூக நிலையில் சமத்துவம், வேலை உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளிலும் சம உரிமை, கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒற்றுமையையும் காக்கும் வண்ணம் அனைவரும் சகோதரர்கள் என்ற உடன்பிறப்பு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் நமது அரசியலமைப்பு சட்டம் 1949 நவம்பர் 26-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்கள், 12 அட்டவணைகள், 395 பிரிவுகள் உள்ளன. இவற்றில் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள், மத்திய அரசின் நிர்வாக அமைப்பு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் போன்றவற்றை வரையறுத்து கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 26 - தேசிய சட்ட நாள் - ஜி.கே.மணி
— G.K.Mani (@PmkGkm) November 26, 2024
1949 ஆண்டு நவம்பர் 26- ஆம் நாள் நமது நாட்டின் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு முறையை ஏற்று சட்டமாக்கிய நாள் ஆகும்.
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்"
இதன்படி இந்தியா ஒரு… pic.twitter.com/y60RuSmrsU
மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதுகாத்து நல்வழிப்படுத்தி மேம்படுத்திட சட்டங்கள் இயற்றுதல், எல்லோருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கு ஏற்ற பொருத்தமான வேலை வாய்ப்பு, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, இலவச கட்டாயக் கல்வி, பொதுசுகாதாரம், மதுவிலக்கு, வேளாண் வளர்ச்சி, தரமான குடிநீர், குடியிருக்க வீடு, சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் போன்றவற்றை நிறைவேற்றுதல். ஆனால் இன்று சட்ட நடைமுறையில் அடித்தட்டு மக்கள் வரை சம உரிமை கிடைக்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகியும் அடித்தட்டு மக்கள் முன்னேறவில்லை. வறுமை ஒழியவில்லை, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. நீதிமன்றங்களில் 3 கோடி வழங்குகள் தேங்கிக்கிடக்கின்றன. விரைந்து முடிக்கப்பட வேண்டும். பொய் வழங்குகள் போடுதல் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சட்டத்தின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.