அக்டோபர் 16 உலக உணவு தினம் - ஜி.கே.மணி டுவீட்

 
gk mani

உலக உணவு தினத்தை முன்னிட்டு பாமக கௌரவ தலைவ ஜி.கே.மணி தனது டுவிட்டர் பக்கத்தில் அது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ளார்.       

 உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும்தான் மனிதன் உயிர்வாழ அடிப்படை தேவைகளை, இவற்றில் முதன்மையான அடிப்படை தேவையாக இருப்பது "உணவு". மனிதன் மட்டுமின்றி உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான்.   ஊட்டச்சத்து மிக்க உணவின் அவசியத்தை கொரோனா நோய் தொற்று எதிர்மறையாக வலியுறுத்தி சென்றுள்ளது, நோய் எதிர்ப்பின் சக்தியை அதிகரிக்க மக்களின் உணவு பழக்கவழக்கம் மாறியுள்ளது.  உலக ஊட்டச்சத்தில் 121 நாடுகளில், இந்தியா 107 வது இடத்தில் உள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.ஊட்டச்சத்து உணவு என்பது ஒருபுறம் இருக்கட்டும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உயிர் வாழ தேவையான உணவு முதலில் கிடைக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில்.



 அந்த வகையில் உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி பட்டினியை எதிர்த்து போரிடவும் 1945 அக்டோபர் 16 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் ஐக்கிய நாடுகள் சபையில் உணவு மற்றும் வேளாண் அமைப்பு(FAO- Food and Agriculture Organisation). 1945 கனடாவில் யுவா நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தற்காலிக தலைமையகம் வாஷிங்டனில் நிறுவப்பட்டது, 1951 ஆம் ஆண்டு உறுப்பு நாடுகள் இதன் தலைமையகம் இத்தாலி தலைநகர் ரோம்க்கு மாற்றப்பட்டது.
 உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பில் இந்தியா உட்பட 194 நாடுகள் தற்போது உறுப்பினராக உள்ளன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.