“எங்கள் வீட்டில் எல்லோரும் காதல் திருமணம்தான்; I'm very proud of my son” - விஷாலின் தந்தை

 
ச் ச்

டிசம்பர் முதல் வாரத்தில் விஷாலுக்கு திருமணம் நடத்தலாம் என்று யோசித்து வருகிறோம் என்று நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு இன்று எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்த நிலையில் நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கத்துக்கு வந்து பார்வையிட்டார். அதற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “நடிகர் சங்கம் கட்டிடம் நிறைவடைந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என விஷால் தெரிவித்து வந்தார். ஒரு வழியாக நிறைவேறியது. பாண்டவர்கள் மாதிரி சேர்ந்து முயற்சி செய்து காடாக இருந்த இடம் தற்போது இவ்வளவு பெரிய பில்டிங்காக மாறி உள்ளது.இந்த கட்டிடத்தை உருவாக்க பல நடிகர்கள் உதவி செய்துள்ளனர். கார்த்தி, விஷால் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து கட்டிடத்தை அமைத்துள்ளனர். ஒற்றுமை இருந்தால் சாதிக்கலாம். I'm very proud of my son. இது அரசாங்கத்தின் பணம் இல்லை, நடிகர்களால் சேர்ந்து கட்டப்பட்டது. கட்டிடம் நன்றாக வந்துள்ளது.

எங்கள் வீட்டில் எல்லோரும் காதல் திருமணம்தான். காதல் திருமணமென்றால்தான் பெற்றோருக்கு பிரச்னை இல்லை. நடிகர் சங்க கட்டட வேலைகள் முடிந்ததும் விஷால் கல்யாணம்தான். இரு மாதங்களில் திருமணம் நடந்துவிடும். டிசம்பர் முதல் வாரத்தில் திருமணம் நடத்தலாம் என்று யோசித்து வருகிறோம்” என்றார்.