ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை - ஜி.கே.வாசன் கண்டனம்
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் 2 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 23 பேரையும் கைது செய்ததோடு, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாகை #மீனவர்கள் மீது #இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TNPolitics #FishermanIssues pic.twitter.com/KSQOGG4LZa
— G.K.Vasan (@GK__Vasan) February 4, 2024
இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும் மிகவும் கண்டிக்கத்தக்கது தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் இழப்புக்கு நிவாரணம் பெற்றுத்தரவும், சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு உரிய பேச்சுவார்த்தையை இலங்கை அரசிடம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.