தேசிய விருது பெற்ற திரைத்துறையினர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்து - ஜி.கே.வாசன்

 
gk vasan

தேசிய விருது பெற்ற திரைத்துறையினர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய திரைப்படங்களுக்கான 69-வது தேசிய விருது பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அறிவித்துள்ளது. விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதை, சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேசிய அளவில் வழங்கி கௌரவித்து வருகிறது.

Image

இந்த வருடம் திரு. மணிகண்டன் அவர்கள் இயக்கத்தில் வெளியான “கடைசி விவசாயி" என்ற தமிழ் திரைப் படத்திற்கு பிராந்திய மொழி பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. பிரதமர் மோடி விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளின் மேன்மைக்காக பாடுபடுகிறார். இந்த தருணத்தில் இந்த விருது அளிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று.தேசிய விருது பெற்ற "கடைசி விவசாயி" திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். மேலும் இப்படத்தில் நடித்த மறைந்த திரு. நல்லாண்டி அவர்களுக்கு "ஜூரி விருது" அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரித்துக்கொள்கிறேன்.

GK Vasan

மேலும் "இரவின் நிழல்" என்ற படத்தில் இடம் பெற்ற “மாயவா தூயவா” என்ற பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னனி பாடகிக்கான விருதும், திரு. இ.வி. கணேஷ் பாபு இயக்கிய "கருவறை” என்ற குறும்படத்திற்கு இசை அமைத்த திரு. ஸ்ரீகாந்த் தேவாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் மேலும் திரு. லெனின் பாரதி இயக்கிய “சிற்பிகளின் சிற்பங்கள்" அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்ற ஆவணப் படத்திற்கும் விருது விருது பெற்ற அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வருங்காலங்களில் தமிழ் திரையுலகம் பல்வேறு விருதுகள் பெற மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டுள்ளார்.