பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும் - ஜி.கே.வாசன்

 
  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்

பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன் தினம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். பாஜக.வுடன் தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.