தேர்தல் கூட்டணி சூழலை பொறுத்து அறிவிக்கப்படும்- ஜி.கே.வாசன்

 
gk vasan

அமலாக்கத்துறை தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், மக்களுக்காக மத்தியில் மாநிலத்திலும் பணி செய்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம் அடங்கிய அக்கட்சியின் மணடல கூட்டம் மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், “நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. நாடாளுமன்றத்தில் 19 மசோதாக்கள் தாக்கல் செய்கின்ற நிலையில் எதிர்கட்சிகள் தனது பணியை சரியாக செய்ய வேண்டும். இரண்டு மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றியை  பெற்றுள்ளது. இந்த வெற்றியில் மத்திய அரசின் பிரதிபலிப்பு இருக்கிறது.

தேர்தல் கூட்டணி, சூழலை பொறுத்து அறிவிக்கப்படும். வட இந்தியாவில்  ஆளும் கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு குடும்ப அரசியல், ஊழல் ஆகியவையே காரணம். சனாதனத்தை ஒழித்து விடவும் முடியாது அழிக்கவும் முடியாது, அதனை யாவரும் ஏற்றுக்கொள்ளலாம். அமலாக்கத்துறையில் தவறு செய்திருந்தாப் அவர் தண்டுக்கப்பட வேண்டும், மக்களுக்காக மத்திய, மாநிலத்தில் பணி செய்பவர்கள் நேர்மையால செயல்பட வேண்டும். அவர்கள் தவறான செயல்பாடுகளில் ஈடுப்படக்கூடாது” என்றார்.