எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது - ஜி.கே.வாசன்
தமிழகத்தை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. இதனிடையே முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
@PMOIndia @narendramodi
— G.K.Vasan (@GK__Vasan) February 9, 2024
அவர்கள் தமிழகத்தை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்,மறைந்த முன்னாள் பிரதமர்கள் #நரசிம்மராவ், #சரண்சிங் ஆகியோருக்கும் #பாரத_ரத்னா_விருது அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சியளிக்கிறது#BharataRatna #MS_Swaminathan, #PVNarsimhaRao pic.twitter.com/3hSitfVqtj
இந்த நிலையில், பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகத்தை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சியளிக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.