இலங்கைக்கு உரிய அழுத்தம் கொடுத்து மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

 
  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..

தமிழக மீனவர்கள்‌ பிரச்சனையில்‌ மத்திய, மாநில அரசுகள்‌ இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்ககடலில்‌ மீன்பிடித்துக்‌ கொண்டிருந்து ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்‌ 27 பேரை இலங்கை கடற்படை சிறைப்‌ பிடித்துள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது. கச்சதீவிற்கும்‌ தனுஷ்கோடிக்கும்‌ இடையே இரண்டு படகுகளில்‌ மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லைத்‌ தாண்டி மீன்பிடித்ததாக 16 மீனவர்களை கைது செய்தும்‌, அவர்களது படகுகளையும்‌ பறிமுதல்‌ செய்துள்ளது. மேலும்‌ அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்து 11 மீனவர்களையும்‌ கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை மீனவர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இலங்கை கடற்படையினராலும்‌, இலங்கை கடற்கொள்ளையர்களாலும்‌ தொடர்ந்து பாதிக்கப்படும்‌ மீனவர்களின்‌ வாழ்வாதாரம்‌ கேள்விக்குறியாக உள்ளது. மீனவர்கள்‌ இயல்பாக கடலுக்குள்‌ மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழக மீனவர்கள்‌ இந்திய எல்லையில்‌ மீன்பிடித்து கொண்டு இருக்கும்‌ போதே இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறுவது மிகவும்‌ கண்டிக்க தக்கது. 

பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் இரட்டை வேடம்- ஜி.கே.வாசன் | tamil news GK  Vasan indictment congress for perarivalan release issue

இலங்கை கடற்படையின்‌ இந்த தொடர்‌ கைது நடவடிக்கையால்‌ இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிக்கும்‌ என்று இலங்கை அரசிற்கு தெரிந்து இருந்தும்‌ கூட அவை மெத்தன போக்கை கடைப்பிடிப்பது வருத்தம்‌ அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள்‌ தமிழக மீனவர்கள்‌ பிரச்சனையில்‌ இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம்‌ கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்‌. தமிழக மீனவர்களின்‌ உரிமையையும்‌ வாழ்வாதாரத்தையும்‌ காக்க, மத்திய மாநில அரசுகள்‌ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று தமிழ்‌ மாநில காங்கிரஸ்‌ சார்பாக கேட்டுக்கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.