ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்விற்கு யோகாசனம் - ஜி.கே.வாசன் வாழ்த்து!!

 
GK Vasan

அனைவருக்கும் சர்வதேச யோகா தின நல்வாழ்த்துகளை ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது.பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தீவிர முயற்சியின் காரணத்தால் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதால் பொது மக்கள் பெரும் பயனடைகிறார்கள்.மனித குலத்தின் ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்விற்கு யோகாசனம் நம்பிக்கை கொடுக்கிறது.மத்திய அரசு நாடு முழுவதும் யோகா கலையைப் பரப்ப மேற்கொண்டு வரும் முயற்சிகள் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு பேருதவியாக இருக்கிறது.

yoga

அந்த வகையில் யோகா பயிற்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் எனஅனைத்து தரப்பு மக்களும் ஈடுபடுவதால் ஒற்றுமை, அன்பு, நட்பு, நல்லெண்ணம், நல்ல பழக்கவழக்கம் ஆகியவை மேலோங்குகிறது.நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று யோகா தினம் கடைபிடிக்கப்படுவதன் மூலம் ஒட்டு மொத்த மனித குலம் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து வருங்கால
சந்ததியினருக்கு நல்வழி காட்டுவார்கள். மனிதரை நேர்வழிப்படுத்துவதற்கு யோகா மிக முக்கியமான கலையாக இருப்பதால் அதை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பெருமைக்குரியது.

yoga

தமிழ்நாட்டு மக்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் நல்ல உடல்நலத்துடன், ஆரோக்கியமாக, நீடூழி வாழ த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.குறிப்பாக இந்தியாவில் தோன்றிய பழங்காலப் பழக்கமான யோகாவை நம் நாட்டில்மட்டுமல்லாமல் உலக அளவில் கொண்டுசென்று உலக மக்களின் நன்மைக்காக, உலக
நாடுகளின் ஒற்றுமைக்காக செயல்படும் பாரதப் பிரதமர் அவர்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன. அனைவருக்கும் சர்வதேச யோகா தினநல்வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ்
சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.