"இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துகள்" - ஜி.கே.வாசன்

 
gk vasan

நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவு கூர்ந்து, அவர் பயணித்த நல்வழியில் பயணிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலக அளவில் இஸ்லாமிய பெருமக்களால் இறைத்தூதரான இப்ராஹீம் நபிகள் நாயகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹச் பயணம் பக்ரீத்தின் போது கடைபிடிக்கப்படுகிறது.இறைத்தூதர் இப்ராஹீம் நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

bakrid

இறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக தியாகத்திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது, இஸ்லாமியர்கள் இத்திருநாளில் சிறப்புத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள். புத்தாடை அணிந்து,மேலும் ஏழை, எளியோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் உணவளித்து, அன்பை பரிமாறிக்கொள்வதும் சிறப்பானது.குறிப்பாக தியாகத்திற்காக கொண்டாடப்படும் மிக முக்கியப் பண்டிகையான பக்ரீத்தை ஒட்டி அனைவரும் தியாக மனப்பான்மையோடு வாழ்ந்து அனைவருக்கும் உதவிக்கரமாக இருக்க வேண்டும்.இறைத்தூதர் எனப் போற்றப்படும் இப்ராஹீமின் அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் நிறைந்த வாழ்வை இஸ்லாமியர்கள் எண்ணி, அவர்தம் தியாகத்தின் மேன்மையைப் போற்றும் வகையில் கொண்டாடி வருங்கால சந்ததியினருக்கு நல்வழி காட்ட வேண்டும்.

muslims mosque

இஸ்லாமியர்கள் ஹஜ் பெருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி, நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவு கூர்ந்து, அவர் பயணித்த நல்வழியில் பயணிக்க, இறைவன் துணை நிற்க த.மா.கா சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.