"தமிழ் மாநில காங்கிரஸ் தனி சின்னத்தில் போட்டி”- ஜி.கே.வாசன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் எத்தனை தொகுதி, எந்த இடங்கள் என்பது எல்லாம் கூட்டணி உறுதி ஆன பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்தியில் NDA கூட்டணியிலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தற்போது தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. நேற்றும், இன்றும் பல கட்சிகளின் பொறுப்பாளர்கள் மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயலை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்கள். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தெரிவித்து இருக்கிறேன். இன்னும் சில வாரங்களில் இன்னும் சில கட்சிகள் பாஜக- அதிமுக கூட்டணிக்கு தங்களுடைய ஆதரவுகளை தெரிவிப்பார்கள் என நம்புகிறேன். மக்கள் விரோத திமுக ஆட்சி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த ஆட்சியை நம்பி இருந்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள், இதற்கு முடிவு மீண்டும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் வரும். இந்த தேர்தல் எங்கள் கூட்டணிக்கு வெற்றி பெற தொண்டர்கள் களத்தில் இறங்கி பணியாற்றிய வருகிறார்கள்
எந்த தொகுதி, எத்தனை தொகுதி எல்லாம் கூட்டணி உறுதி செய்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கும் அத்தனை கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் எங்களது சின்னத்தில் தான் போட்டியிடும். திமுகவை வீழ்த்த நினைக்கும் அத்தனை கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய வேண்டும்” என தெரிவித்தார்.


