4 நாட்களுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று  அதிரடியாக சவரனுக்கு ரூ.112  குறைந்திருக்கிறது.  கடந்த 4 நாட்களாக  தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று இரக்கம் காட்டியிருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
   
 ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாள் விலை அதிகரிப்பதுமாக அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது தங்கம் விலை..  கடந்த வாரம் முதல் தொடர்ந்து 5 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை  இன்று சரிவை சந்தித்திருக்கிறது.  கடந்த 19 ஆம் தேதி  ஆப்ரணத் தங்கம் விலை சவர்னுக்கு ரூ 128 அதிகரித்து,  ரூ. 38,040 க்கு விற்கப்பட்டது.  

தங்கம் விலை

தொடர்ந்து  20ம் தேதி மாலை நிலவரப்படி 22  கேரட் ஆபரணத் தங்கம் அதிரடியாக சவரனுக்கு ரூ. 304 அதிகரித்து , 38, 344 ரூபாய்க்கு விற்பனையானது.  21 ஆம் தேதியான சனிக்கிழமையும் சவருக்கு ரூ. 192 அதிகரித்து  ஒரு சவரன்   ரூ. 38,536 க்கு விற்பனையானது.  இந்நிலையில் 5வது நாளாக  நேற்றும்  தங்கம் விலை சவவரனுக்கு 160  ரூபாய் அதிகரித்து  ஒரு சவரன் ரூ. 38,696 ரூபாய்க்கு விற்கப்பனையானது.  இந்த  5  நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 784 ரூபாய் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு... சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டி  விற்பனை..

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு  14 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.  4,823 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சவரனுக்கு ரூ.112 குறைந்து    8 கிராம் கொண்ட  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,584 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது.   அதேநேரம் இன்றைய தினம் வெள்ளி விலை சற்று அதிகரித்திருக்கிறது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி நேற்றைய தினம் ரூ. 66.10 க்கு விற்பனையான நிலையில் இன்று, 66 ரூபாய் 80 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 66 , 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.