தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்... 2 நாட்களில் சவரனுக்கு ரூ.512 சரிவு..

 
இன்றைய தங்க மற்றும் வெள்ளி விலை நிலவரம் !


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  சவரனுக்கு ரூ.248  குறைந்து ஒரு சவரன் ரூ.39,048 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  2 நாட்களில் தங்கம் விலை 512 ரூபாய் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஒரு நாள் உயர்வதும், ஒரு குறைவதுமாக  தாறுமாறன ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதிலும் உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்தே வர்த்தகம்  நிலையின்றி காணப்படுவதால்,  தங்கம் விலையில்  மாற்றம் இருந்து வருகிறது.  கடந்த 14-ந்தேதி தமிழ்புத்தாண்டு நாளன்று தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டி இல்லத்தரசிகளிடையே  பெரும்  அதிர்ச்சியை எற்படுத்தியது.  அதன்பிறகு கடந்த 20 ஆம் தேதி முதல் சரிவைச் சந்தித்து வருகிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

நேற்றைய தினம்  சவரனுக்கு 264  ரூபாய் குறைந்து, அதன்படி  ஒரு சவரன்  22 கேரட்  ஆபரணத் தங்கம் 39,296  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  பின்னர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ. 248 குறைந்து,  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 39,048 க்கு விற்கப்படுகிறது.  சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 4,881 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த விலைக்குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் இன்றும்   சென்னையில் வெள்ளி விலை  குறைந்திருக்கிறது. கடந்த நேற்று  ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய் 80  காசுகளுக்கு விற்பனை நிலையில் இன்று,  30 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 70. 50  ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 70, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.