அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - விலை நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

புதன் கிழமை தங்கம் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையானது. வியாழக்கிழமை   ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 13ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து,  ஒரு  சவரன் ரூ. 46,760-க்கு விற்பனையானது.

gold
 

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று  கிராமுக்கு ரூ.25 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,870க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனையாகிறது. அத்துடன் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78.30க்கும் ஒரு கிலோ ரூ.78,300க்கும் விற்பனையாகிறது.