தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!!

 
1

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.80 குறைந்துள்ளது.

சென்னையில்  தங்கத்தின் விலை  தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.5,670-க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனையாகிறது.