சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

gold

தங்கத்தின் விலையானது நேற்று முன்தினம்  சவரனுக்கு 72 ரூபாயும் குறைந்தது. அதன்படி நேற்று ஒரு கிராம் ரூ.5,437க்கும், ரூ. 43,496க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி  ஒரு கிராம் 75 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையானது. நேற்று  தங்கம் விலை  சவரனுக்கு 56  ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ஒரு கிராமுக்கு ரூ. 5,430 ஆகவும், சவரனுக்கு ரூ. 56 குறைந்து ஒரு சவரன் 43,440 ரூபாயாகவும் விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5440 க்கு விற்பனையாகிறது.