உச்சத்தில் தங்கம் விலை.. தொடர்ந்து 2வது நாளாக சவரனுக்கு ரூ. 248 அதிகரிப்பு..

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 248 அதிகரித்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரம் ரூயாபை தாண்டி விற்பனையாகி வருகிறது.  

gold

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்னர் அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது தங்கம் விலை..   சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, தங்கத்தை சிறந்த முதலீட்டுக்கான புகலிடமாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.  இந்தியாவைப் பொறுத்தவரை   பெண்கள்  தங்கத்தின் மீதான முதலீட்டை  சிறந்த சேமிப்பாகவும், லாபகரமானதாகவும் பார்க்கின்றனர். இதுவே  தங்கத்தின் மவுசு கூடி அதன் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாள் விலை அதிகரிப்பதுமாக இருந்து வரும் தங்கம் விலை, 2வத் நாளாக  இன்றும்  அதிரடி உயர்வை சந்தித்திருக்கிறது.

வெள்ளி

சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி 22  கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 128 அதிகரித்து  38,040 ரூபாய்க்கு விற்பனையானது.    அதனைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக 248 ரூபாய் அதிகரித்திருக்கிறது. அந்தவகையில்  இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் அதிகரித்து,   ஒரு கிராம் ரூ.  4,877 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சவரனுக்கு ரூ. 248 அதிகரித்து   8 கிராம் கொண்ட  ஒரு சவரன் ஆபரணத் தங்கம்   ரூ. 38,288 க்கு  விற்கப்படுகிறது.    

அதேபோல்  வெள்ளி விலையும் இன்று  உயர்ந்திருக்கிறது.   சென்னையில்  சில்லறை வர்த்தகத்தி  ஒரு கிராம் வெள்ளி விலை, இன்று 65 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகிறது.   ஒரு கிலோ வெள்ளி 65,900  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.