தொடர்ந்து சரியும் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. சவரனுக்கு ரூ.400 குறைவு..

 
gold


சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.38,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
தங்கத்தில் முதலீடு செய்வது என்பது  புத்திசாலித்தனமான  சேமிப்பாக பார்க்கப்படுகிறது.  பெண்கள் ஆபரணங்கள் அணிந்து பார்க்க ஆசைப்படுவது ஓரு பக்கம் என்றாலும், எதிர்காலத்திற்கான சேமிப்பிற்காகவே  தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அந்தவகையில்  தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே  தொடர்ந்து தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக  ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.

gold

 இதனிடையே, ரஷ்யா- உக்ரைன்  போர்ச்சூழல் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையில் பல்வேறு  மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.  அதேபோல் இந்திய பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலையும் அதிகரித்தது.  ஆனால்  கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிறையில், இன்று மேலும் 400 ரூபாய் குறைந்திருக்கிறது.

வெள்ளி

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,869-க்கும், ஒரு சவரன் ரூ.38,952-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று,  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.4,819-க்கு விற்பனையாகிறது. அதேபோல்  சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதனைத்தொடர்ந்து  சென்னையில் நேற்று 74 . 20 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளி  விலை, இன்று  ஒரு கிராமுக்கு 1 ரூபாய் 40 காசுகள் குறைந்திருக்கிறது. இன்று ஒரு கிராம்வெள்ளி   ரூ.72.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது .