தங்கம் விலையில் சரிவு : இன்றைய விலை நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து சரிவை சந்தித்துள்ளது.

கொரோனா காரணமாக தொழில்துறை தேக்கம் ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் , பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளனர்.  இதன் மூலம் பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அதன் விலையும் கடந்த சில வாரங்களாக  கணிசமாக உயர்ந்து வந்தது.  அதேசமயம் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களும் நிலவி வருகின்றன.

gold

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா  எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்து உள்ளன.  இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள் , முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை தங்கத்தை வாங்க போட்டி போட்டு வருகின்றனர். 

gold

இந்நிலையில் தங்கம் விலை இன்று கணிசமாக குறைந்து காணப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து  ரூ.35,856-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,447க்கு விற்பனையாகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.35856-க்கு விற்பனையான இன்று மேலும் ரூ.176 குறைந்துள்ளது சாமானியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.