ஒரேநாளில் குறைந்தது தங்கம் விலை - மகிழ்ச்சியில் சாமானியர்கள்!!

 
gold gold

தங்கம் விலை சவரனுக்கு 272 ரூபாய் குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு நற்செய்தியாக மாறியுள்ளது. 

gold

பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே ஏற்ற, இறக்கங்களை சந்தித்து  வரும்  நிலையில் இன்று  மீண்டும் சரிவை கண்டுள்ளது சாமானியர்கள் மத்தியில் நிம்மதியா ஏற்படுத்தியுள்ளது.  நேற்று   சென்னையில்   ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.37,048 என நிர்ணயிக்கப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 272 குறைந்துள்ளது. இதன்மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 37 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 குறைந்துள்ள  நிலையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 625 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி 71,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தூயத் தங்கமான 24 கேரட் தங்கத்தின் விலை 4, 989 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 39,912 ரூபாய்க்கு விற்பனையாகிறது.