தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து மீண்டும் ரூ.36 ஆயிரத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,515க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.36,120க்கும் விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது.

gold

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.4,518க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.36,144க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,300க்கும் விற்பனையாகிறது.