ஏறுமுகத்தில் தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தொழில்துறையில் நிலவும் தேக்கம் குறித்த அச்சத்தால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக சரிந்து மீண்டும் ஏற்றத்தை கண்டது. இம்மாதமும் அதே நிலை தான். கடந்த 1ம் தேதி தங்கம் விலை குறைந்ததைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,387க்கும் ஒரு சவரன் ரூ.35,096க்கும் விற்பனையாகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது. 

gold

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.4,411க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.35,288க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,200க்கும் விற்பனையாகிறது.