தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு தொழில்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில்கள் முடங்கின. தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு தொழில்துறை மீண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவையே உலுக்கி எடுத்துவிட்டது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு தொழில்துறையில் தேக்கம் இல்லையெனினும் தேக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஒரு நாள் விலை குறைந்தால் மறுநாளே அதிகரிக்கும் சூழலே நீடிக்கிறது. 

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,462க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.35,696க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500க்கும் விற்பனையாகிறது.