தங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் இது தான்!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஒரு நாள் குறைந்தால் மறுநாள் அதிகரிக்கும் சூழலே நீட்டிக்கிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு கிராம் ரூ.4,456க்கும் ஒரு சவரன் ரூ.35,648க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,484க்கும் ஒரு சவரன் ரூ.35,872க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 

gold
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,474க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.35,792க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700க்கும் விற்பனையாகிறது.