தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.

gold

கொரோனா வைரஸ் பரவலால் தொழில்துறையில் தேக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஒரு நாள் குறைந்தால் மறுநாள் அதிகரிக்கும் நிலையிலேயே நீட்டித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,522க்கும் ஒரு சவரன் ரூ.36,176க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு கிராம் ரூ.4,508க்கும் ஒரு சவரன் ரூ.36,064க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.4,506க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.36,048க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.68.90க்கும் ஒரு கிலோ ரூ.68,900க்கும் விற்பனையாகிறது.