தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் தங்கம் விலை அதிரடியாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்தது. கடந்த மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை சரிந்து ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. இதையடுத்து, மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ரூ.35 ஆயிரத்துக்கு மேல் சென்று பிறகு குறைந்துவிட்டது. இந்த மாதமும் அதே நிலை தான். அக்டோபர் மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்த நிலையில் தற்போது ரூ.35 ஆயிரத்தில் நீட்டிக்கிறது. 

gold

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,382க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35,056க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,800க்கும் விற்பனையாகிறது.