தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 
gold gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தொழில்துறையில் தேக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது. கடந்த ஆண்டு தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இம்முறை தேக்கம் ஏற்படவில்லை என்றாலும் முதலீட்டாளர்களிடையே தேக்கம் குறித்த அச்சம் நீட்டிக்கிறது. எனவே, தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,408க்கும் ஒரு சவரன் ரூ.35,264க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 

gold

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,413க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.35,304க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,200க்கும் விற்பனையாகிறது.