தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,506க்கும் சவரன் ரூ.36,048க்கும் விற்பனையாகிறது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. 

gold

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,501க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,008க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700க்கும் விற்பனையாகிறது.