அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்தது.

gold

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நேற்று முன்தினம்  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,560 ஆக விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து   ரூ.5,695-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.77.70-ஆக விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,600 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து  ரூ.5,700க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ. 45,720-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ. 15 குறைந்து ரூ. 5715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.