தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..

 
 தங்கம் விலை

சென்னையில் தங்கம்  விலை சவரனுக்கு  120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.44,400க்கு விற்பனையாகிறது.  

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து வருகிறது. ஒரு நாள் குறைவதும், ஒரு நாள் உயர்வதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை  கடந்த வாரங்களில் அதிரடியாக உயர்ந்தது.  கடந்த சனிக்கிழமையன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.44,520க்கும், ஒரு கிராம் ரூ.5,565க்கும் விற்பனை செய்யப்பட்டது.   இந்த நிலையில் தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது.  

தங்கம் விலை

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம்  ரூ.5,550க்கு விற்கப்படுகிறது.  மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.80க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி  ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.