தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு..

 
gold gold


சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040க்கு விற்பனையாகிறது.  

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடனேயே  இருந்து வருகிறது.  சில நாட்கள் குறைந்த அளவு சரிவதும், அடுத்த நாளே அதிரடியாக உயர்வதுமாக  கனிசமாக ஏற்றத்தையே சந்தித்து வருகிறது. அந்த வகையில்  கடந்த சனிக்கிழமை (17ஆம் தேதி)  சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு சவரன் ரூ,44,360க்கும் விற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஞாயிறு மற்றும் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பின்னர் நேற்று ( செவ்வாய்கிழமை) அதிரடியாக குறைந்தது.  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,535 ரூபாய்க்கும்,  ஒரு சவரன்  ரூ. 44,280 க்கும் விற்பனையானது.  அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ. 78.60 விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.  அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,505 க்கும், ஒரு சவரன் ரூ. 44,040க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 2 ரூபாய் 10 காசுகள் சரிந்திருக்கிறது.  அதன்படி சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 76.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.76,500க்கு விற்கப்படுகிறது.