இன்று மீண்டும் சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ72 குறைவு..

 
gold


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ஒரு சவரன்  ரூ. 43,496 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரங்களில் தொடர்ந்து குறைந்து வந்து தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் உயர்ந்தது.  ஆனால் நேற்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43,568 ரூபாயாகவும் விற்பனையானது..   கிராமுக்கு ரூ 29 குறைந்து ஒரு கிராமுக்கு ரூ. 5,440 ஆக விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 75 ரூபாய் 70 காசுகளாகவும்,  ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரத்து 700 ரூபாயாகவும் விற்கப்பட்டது.

gold

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை  சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 9 குறைந்து ஒரு கிராமுக்கு ரூ. 5,437 ஆகவும், சவரனுக்கு ரூ. 72 குறைந்து ஒரு சவரன் 43,496 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இன்றைய தினம் வெள்ளி 40 காசுகள் குறைந்து  ஒரு கிராம் வெள்ளி 75 ரூபாய் 30 காசுகளாகவும்,  ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரத்து 300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.