சற்று ஏற்றம் கண்ட தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் கவலை..

 
தங்கம் விலை

சென்னை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து , ஒரு சவரன்  ரூ,44,360க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வரை சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஏற்றம் காண தொடங்கியிருக்கிறது. அதன்படி கடந்த 14ம் தேதி   சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன் தினமும் சவரனுக்கு  ரூபாய் 360 குறைந்து, சவரன் ரூ.  44,040 க்கு விற்பனையானது. 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்  விலை நிலவரம்

தொடர்ந்து குறைந்ததால் இல்லத்தரசிகளும், நகைப்பிரியர்களும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.296 அதிகரித்தது.  ஒரு கிராம் 5,542 ரூபாயாகவும், ஒரு சவரன் ரூ. 44,336க்கும் உயர்ந்து விற்பனையானது. இந்நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்றும் தங்கம் விலை சற்று ஏற்றம் கண்டிருக்கிறது.  அந்தவகையில் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ,  ஒரு கிராம் தங்கம் ரூ.5,545க்கும்,  ஒரு சவரன் ரூ,44,360க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.