தங்கம் விலை அதிரடி உயர்வு; இன்றைய நிலவரம் இது தான்!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ரூ.35 முதல் ரூ.36 ஆயிரத்தில் தங்கம் விலை நீட்டிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நிலவும் தேக்கம் குறித்த அச்சம். இதனால், தங்கம் விலை ஒரு நாள் அதிகரித்தால் மறுநாள் குறையும் நிலையிலேயே நீட்டித்து வருகிறது. 

gold

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,536க்கும் ஒரு சவரன் ரூ.36,288க்கும் விற்பனையானது. இதைத் தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு கிராம் ரூ.4,500க்கும் ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.4,525க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.36,200க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,100க்கும் விற்பனையாகிறது.