அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - சாமானியர்கள் அதிர்ச்சி!!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

gold

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,800க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850க்கு விற்பனையானது.  வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.82,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.47,320-க்கு விற்பனையாகிறது .  1 கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.5,915-க்கும் விற்பனையாகிறது.  இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ஓர் ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.83.50-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.83,500 ஆகவும் விற்பனையாகிறது.